பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும் என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல் துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!
“ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்!” என்று அரும் பிணிநோய் காவாது ஒழியின் கலக்கும், உன்மேல் பழி; காதல் செய்வார் தேவா! திருவடி நீறு என்னைப் பூசு-செந்தாமரையின் பூ ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் புண்ணியனே!
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான் படவும் திருவிரல் ஒன்று வைத்தாய்; பனிமால்வரை போல் இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்-இருஞ் சோலை திங்கள் தடவும் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் தத்துவனே!