திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன் நின்று ஆண்டாய், எனை முன்னம்; யானும், அதுவே முயல்வு உற்று,
பின் நின்று, ஏவல் செய்கின்றேன்; பிற்பட்டு ஒழிந்தேன்; பெம்மானே!
என்? என்று, அருள் இவர நின்று, போந்திடு என்னாவிடில், அடியார்,
உன் நின்று, இவன் ஆர் என்னாரோ? பொன்னம்பலக் கூத்து உகந்தானே!

பொருள்

குரலிசை
காணொளி