பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார், சிரிப்பார், களிப்பாராய்; வாடி வாடி, வழி அற்றே, வற்றல் மரம் போல் நிற்பேனோ? ஊடி ஊடி, உடையாயொடு கலந்து, உள் உருகி, பெருகி, நெக்கு, ஆடி ஆடி, ஆனந்தம் அதுவே ஆக, அருள் கலந்தே!