பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியுமென்(று) ஏசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட் கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயுமிந்தத் தேசத் தவர்தொழும் நாரைப் பதியுட் சிவக்களிறே.