பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன் உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே, கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர்போலும் விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே.