திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

பை அரா வரும் அல்குல், மெல் இயல்,பஞ்சின் நேர் அடி,
வஞ்சி கொள் நுண் இடை,
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம்மலர்த் தேறல் ஊறலின், சேறு
உலராத, நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே

பொருள்

குரலிசை
காணொளி