திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட,
பேர் இடர்த் தேவர்கணம், “பெருமான், இது கா!” எனலும்,
ஓர் இடத்தே கரந்து, அங்கு உமை நங்கையொடும்(ம்) உடனே
பேர் இடம் ஆகக் கொண்ட பிரமாபுரம் பேணுமினே!

பொருள்

குரலிசை
காணொளி