பூதமும் பல் கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன்
பொருந்த,
சீதமும் வெம்மையும் ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால்
எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன் நகராரே.