திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

வார் இருங்குழல், மை வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்-
தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த,
கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய்
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!

பொருள்

குரலிசை
காணொளி