பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கூடிய இலயம் சதி பிழையாமை, கொடி இடை உமை அவள் காண, ஆடிய அழகா! அருமறைப் பொருளே! “அங்கணா! எங்கு உற்றாய்?” என்று தேடிய வானோர் சேர் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால் பாடிய அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே!.