திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மரு ஒத்த மங்கையும் தானும் உடனே
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார்
கரு ஒத்து நின்று கலங்கின போது
திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி