பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சுரர், மா தவர், தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லா நரர் ஆன பல் முனிவர், தொழ இருந்தான் இடம் நலம் ஆர் அரசார் வர அணி பொன்கலன் அவை கொண்டு பல் நாளும் முரசு ஆல்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே.