பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நீல மேனி அமணர் திறத்து நின் சீலம் வாது செயத் திரு உள்ளமே? மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர் கோலம் மேனி அது ஆகிய குன்றமே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே!