திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

நக்கு உலாம் மலர் பல்-நூறு கொண்டு நல் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான், மென்மலர் ஒன்று காணாது,
“ஒக்கும், என் மலர்க்கண்” என்று அங்கு ஒரு க(ண்)ண்ணை இடந்தும் அப்ப,
சக்கரம் கொடுப்பர் போலும்-சாய்க்காடு மேவினாரே.

பொருள்

குரலிசை
காணொளி