கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண்; கண்டன்
காண்; வண்டு உண்ட கொன்றையான் காண்;
எரி, பவள, வண்ணன் காண், ஏகம்பன் காண்;
எண்திசையும் தான் ஆய குணத்தினான் காண்;
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடி காண்; தீவினைகள்
தீர்த்திடும் என் சிந்தையான் காண்;
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.