திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

இல் ஆடிச் சில்பலி சென்று ஏற்கின்றான் காண்; இமையவர்கள்
தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்;
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண்; வெண் நூலும் சேர்ந்த
அகலத்தான் காண்;
மல் ஆடு திரள் தோள்மேல் மழுவாளன் காண்; மலைமகள்
தன் மணாளன் காண்; மகிழ்ந்து முன்நாள்
கல்லாலின் கீழ் இருந்த காபாலீகான் காளத்தியான் அவன்,
என் கண் உளானே.

பொருள்

குரலிசை
காணொளி