பாதம் தனிப் பார்மேல் வைத்த பாதர்; பாதாளம் ஏழ்
உருவப் பாய்ந்த பாதர்;
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர்; ஏழ் உலகும் ஆய்
நின்ற ஏகபாதர்;
ஓதத்து ஒலி மடங்கி, ஊர் உண்டு ஏறி, ஒத்து உலகம்
எல்லாம் ஒடுங்கிய(ப்)பின்,
வேதத்து ஒலி கொண்டு, வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்தனாரே.