ஆகத்து உமை அடக்கி, ஆறு சூடி, ஐவாய் அரவு
அசைத்து, அங்கு ஆன் ஏறு ஏறி,
போகம் பல உடைத்து ஆய்ப் பூதம் சூழ, புலித்தோல்
உடையாப் புகுந்து நின்றார்;
பாகு இடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி, பரிசு
அழித்து, என் வளை கவர்ந்தார், பாவியேனை;
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு
மேவிய விகிர்தனாரே.