பண்ணியனை, பைங்கொடியாள் பாகன் தன்னை, படர்
சடைமேல் புனல் கரந்த படிறன் தன்னை,
நண்ணியனை, என் ஆக்கித் தன் ஆனானை, நால்
மறையின் நல் பொருளை, நளிர் வெண்திங்கள்
கண்ணியனை, கடிய நடை விடை ஒன்று ஏறும்
காரணனை, நாரணனை, கமலத்து ஓங்கும்
புண்ணியனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே
ஆற்ற நாள் போக்கினேனே!.