இறுத்தானை, இலங்கையர் கோன் சிரங்கள் பத்தும்; எழு
நரம்பின் இன் இசை கேட்டு இன்பு உற்றானை;
அறுத்தானை, அடியார் தம் அருநோய் பாவம்; அலை
கடலில் ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை; கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை;
கனல், மழுவும், கலையும், அங்கை
பொறுத்தானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே
ஆற்ற நாள் போக்கினேனே!.