மு(ன்)ன்னியா நின்ற முதல்வா, போற்றி! மூவாத
மேனி உடையாய், போற்றி!
என்(னி)னியாய், எந்தை பிரானே, போற்றி!
ஏழ் இன் இசையே உகப்பாய், போற்றி!
மன்னிய மங்கை மணாளா, போற்றி! மந்திரமும்
தந்திரமும் ஆனாய், போற்றி!
கன்னி ஆர் கங்கைத் தலைவா, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.