திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மூ இலை வேல் கையானை, மூர்த்தி தன்னை, முது பிணக்காடு
உடையானை, முதல் ஆனானை,
ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோனை, ஆலாலம்
உண்டு உகந்த ஐயன் தன்னை,
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வு அரிய
பெருமானை, புனிதன் தன்னை,
காவலனை, கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை, கற்பகத்தை,
கண் ஆரக் கண்டேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி