திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
பல் ஆடுதலை சடை மேல் உடையான் தன்னை, பாய்
புலித்தோல் உடையானை, பகவன் தன்னை,
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை,
சுடர் உருவில் என்பு அறாக் கோலத்தானை,
அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை,
ஆலின் கீழ் இருந்தானை, அமுது ஆனானை,
கல் ஆடை புனைந்து அருளும் காபாலி(ய்)யை,
கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.