திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

நாதனுக்கு ஊர், நமக்கு ஊர், நரசிங்கமுனை அரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர், அணி நாவலூர் என்று
ஓத நல்-தக்க வன்தொண்டன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினைக்கட்டு அறுமே .

பொருள்

குரலிசை
காணொளி