திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

“முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும் மூர்த்தி” என்னப்-
பட்டானை, பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக
விட்டானை, மலை எடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்-
தொட்டானை, புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

பொருள்

குரலிசை
காணொளி