பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொண்டனார் தமக்கு அருளிச் சூழ்ந்து இமையோர் துதி செய்ய, இண்டை வார் சடை முடியார் எழுந்து அருளிப் போயினார்; வண்டுவார் குழல் கொடியைக் கைப் பிடிக்க மணக் கோலம் கண்டவர்கள் கண் களிப்பக் கலிக் காமனார் புகுந்தார்.