திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அங்கயல் கண்ணி தம் பெருமான் மேல்
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்து உறும் என வெருக் கொண்டே
உள் நிலாவிய பதைப்பு உறு காதலுடன் திருக் கையால் தடுத்தும் நில்லாமை
தண் நிலா மலர் வேணியினாரைத் தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்