திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

கடிது என வந்த கரிதனை உரித்து அவ் உரி மேனிமேல்
போர்ப்பர்
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை
பிறைநுதலவளொடும் உடன் ஆய
“கொடிது” எனக் கதறும் குரைகடல் சூழ்ந்து கொள்ள, முன்
நித்திலம் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கம் ஆய்த் தோன்றும்
கோணமாமலை அமர்ந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி