பனித்த இளந்திங்கள் பைந்தலை நாகம் படர் சடை முடி
இடை வைத்தார்
கனித்து இளந் துவர்வாய்க் காரிகை பாகம் ஆக முன்
கலந்தவர், மதில்மேல்
தனித்த பேர் உருவ விழித் தழல் நாகம் தாங்கிய மேரு
வெஞ்சிலையாக்
குனித்தது ஓர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை
அமர்ந்தாரே.