“கடுகிய தேர் செலாது, கயிலாயம் மீது; கருதேல், உன் வீரம்; ஒழி, நீ!
முடுகுவது அன்று, தன்மம்” என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா,
“விடு விடு” என்று சென்று விரைவு உற்று, அரக்கன், வரை உற்று எடுக்க, முடிதோள
நெடு நெடு இற்று வீழ, விரல் உற்ற பாதம் நினைவு உற்றது, என் தன் மனனே.