திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: சித்தத்தொகை திருக்குறுந்தொகை

சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ?
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின்,
மரணம் எய்தியபின், நவை நீக்குவான்
அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?

பொருள்

குரலிசை
காணொளி