திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

துறந்தார்க்குத் தூ நெறி ஆய் நின்றான் தன்னை,
துன்பம் துடைத்து ஆள வல்லான் தன்னை,
இறந்தார்கள் என்பே அணிந்தான் தன்னை,
எல்லி நடம் ஆட வல்லான் தன்னை;
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான் தன்னை,
மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும்
சிறந்தானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி