மலையானை, மா மேரு மன்னினானை, வளர்புன்
சடையானை, வானோர் தங்கள்
தலையானை, என் தலையின் உச்சி என்றும்
தாபித்து இருந்தானை, தானே எங்கும்
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை,
தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த
சிலையானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.