திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து, கழலும் சிலம்பும் கலிக்க, பலிக்கு என்று
உச்சம் போதா ஊர் ஊர் திரியக் கண்டால் அடியார் உருகாரே?
இச்சை அறியோம்; எங்கள் பெருமான்! ஏழ் ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய்!
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே! .

பொருள்

குரலிசை
காணொளி