திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

சாலக் கோயில் உள நின் கோயில்; அவை என் தலை மேல் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன்; வினையும் துரந்தேன்-வானோர் அறியா நெறியானே!
கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர் பூங் கச்சூர் வடபாலை
ஆலக்கோயில், கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே! .

பொருள்

குரலிசை
காணொளி