விழுது நிணத்தை விழுங்க விட்டு,
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழுதி துடைத்து, முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா(து)
அழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.