திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை


துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்

உழை, இளி, ஓசைபண் கெழுமப் பாடிச்

சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,

தகுணிச்சம், துந்துபி, தாளம், வீணை,

மத்தளம், கரடிகை, வன்கை மென்தோல்

தமருகம், குடமுழா, மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினோ(டு) ஆடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொருள்

குரலிசை
காணொளி