பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்! கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ? சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்; செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!