திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன்; தில்லைச் சிந்தா-
மணி, உம்பரார் அறியா மறையோன், அடி வாழ்த்தலரின்,
பிணியும் அதற்கு மருந்தும், பிறழப் பிறழ, மின்னும்
பணியும் புரமருங்குல், பெருந்தோளி படைக்கண்களே
இறைதிருக் கரத்து மறிமான் நோக்கி
உள்ளக் கருத்து வள்ளல் அறிந்தது.