திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
ஏழ்உடையான் பொழில், எட்டுஉடையான்புயம், என்னை முன்னாள்
ஊழ்உடையான், புலியூர் அன்ன பொன், இவ் வுயர் பொழில்வாய்ச்
சூழுடை ஆயத்தை நீக்கும் விதி துணையா, மனனே!
யாழ்உடையார் மணம்காண், அணங்காய் வந்து, அகப்பட்டதே.
கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது