பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு செஞ்சடையாரும், கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும், எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும், பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே.