விரவு நீறு பொன்மார்பினில் விளங்கப் பூசிய வேதியன்,
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது
அன்றியும்,
அரவு நீள்சடைக் கண்ணியார், அண்ணலார், அறையணி
நல்லூர்
பரவுவார் பழி நீங்கிட, பறையும், தாம் செய்த பாவமே.