தீயின் ஆர் திகழ் மேனியாய்! தேவர்தாம் தொழும் தேவன்
நீ
ஆயினாய்! கொன்றையாய்! அனல் அங்கையாய்!
அறையணி நல்லூர்,
மேயினார் தம தொல்வினை வீட்டினாய்! வெய்ய காலனைப்
பாயினாய்! அதிர் கழலினாய்! பரமனே! அடி பணிவனே.