திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

வீரம் ஆகிய வேதியர்; வேக மா களியானையின்
ஈரம் ஆகிய உரிவை போர்த்து, அரிவைமேல் சென்ற எம்
இறை;
ஆரம் ஆகிய பாம்பினார்; அண்ணலார்; அறையணி
நல்லூர்
வாரம் ஆய் நினைப்பார்கள் தம் வல்வினை அவை
மாயுமே.

பொருள்

குரலிசை
காணொளி