முற்றல் ஆமை அணிந்த முதல்வரே; மூரி ஆமை அணிந்த
முதல்வரே;
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே; பாலும் நெய் உகந்து
ஆட்டும் பரிசரே;
வற்றல் ஓடு கலம், பலி தேர்வதே; வானினோடு கலம், பலி,
தேர்வதே,
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே; காஞ்சி மா நகர்க் கம்பம்
இருப்பதே.