திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

இரும் புகைக்கொடி தங்கு அழல் கையதே; இமயமாமகள்,
தம் கழல், கையதே;
அரும்பு மொய்த்த மலர்ப் பொறை தாங்கியே; ஆழியான்
தன் மலர்ப் பொறை தாங்கியே;
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே, பேதைமார் மனம்
வாடுதல் செய்துமே,
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே, காஞ்சி மா
நகர்க் கம்பம் இருப்பு அதே.

பொருள்

குரலிசை
காணொளி