திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே, உன் பொருள்-திறம் ஈர்
உரு ஆகவே,
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே; ஆற்ற எய்தற்கு அரிது,
பெரிதுமே;
தேரரும் அறியாது திகைப்பரே; சித்தமும் மறியா, துதி
கைப்பரே;
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.

பொருள்

குரலிசை
காணொளி