பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
படை இலங்கு கரம் எட்டு உடையான், படிறு ஆகக் கனல் ஏந்திக் கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன், உறை கோயில், மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம் அடைய நின்ற அடியார்க்கு அடையா, வினை அல்லல் துயர்தானே.