திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை

கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை,
உருவம் நோக்கியை, ஊழி முதல்வனை,
பருகு பாலனை, பால்மதி சூடியை,
மருவும் மைந்தனை, நான் மறக்கிற்பனே?

பொருள்

குரலிசை
காணொளி