திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: போற்றித் திருத்தாண்டகம்

மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி! மருவி
என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி! உள்
ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி! தேசம்
பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.

பொருள்

குரலிசை
காணொளி